கொவிட் -19 வைரசால் ஆஸ்திரேலியாவில் முதல் பலி.!

Default Image

கடந்த மாத தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்தது.இதில் 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு  கொவிட்-19 வைரஸ் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து கப்பலில் வந்த அனைவரும் ஆஸ்திரேலியாவின்    சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த  78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு  உள்ளது.சீனாவில் நேற்று வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,870 ஆகவும் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,824 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்