கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்நிலையில் covid-19 வைரஸ் தாக்குதலால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.இந்த தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவிற்கு அடுத்த படியாக தென்கொரியாவில் தான் covid-19 வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.அதனால் தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவில் நேற்று மட்டும் 256 பேருக்கு covid-19 வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…