இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மற்றும் ஆல்பா வகை கொரோனாக்களுக்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி சிறப்பாக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனை அடுத்து இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், நீடித்து செயல்படக்கூடியதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனையில் அறிகுறியுடன் கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த தடுப்பூசி 78% செயல்திறனுடன் இருக்கும் எனவும், கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இது 100% செயல்படும் என்றும், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70% செயல்படும் என்றும் இவர்களது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…