விஜய் பட நடிகைக்கு பிடி வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்..!

Default Image

ஹிந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் தளபதி விஜயுடன் “புதிய கீதை” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரும் , இவரது பார்ட்னர் குணாயும் சேர்ந்து “தேசி மேஜிக்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்க ராஞ்சி சார்ந்த தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இருந்து  2.5 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
கடனுடன் சேர்ந்து 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் இவர்கள் சொன்னபடி குறித்த நேரத்தில் பணத்தை தரவில்லை.மேலும் அதற்கான பதிலையும் சரியாகக் கொடுக்கவில்லை.
இதனால் ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக அஜய்குமார் சிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக  நடிகை அமிஷாவிற்கு  நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இதுவரை ஆஜர் ஆகவில்லை.இந்நிலையில் தற்போது நீதிமன்றம் பிடிவாரன்ட்  பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து ராஞ்சி போலீசார் அவரை கைது செய்ய மும்பை சென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்