விமானத்தில் வைத்து முத்தமிட்ட ஜோடிகள் – விமான பணிப்பெண்கள் மீது புகார் அளித்த வழக்கறிஞர்!
விமானத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜோடிகள் இருவரும் முத்தமிட்டதற்கு போர்வை வழங்கிய விமான பணிப்பெண் மீது அந்த விமானத்தில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள விமானமா பி 200 விமானத்தில் மே 20ஆம் தேதி பயணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்த தம்பதிகள் விமானத்தில் வைத்து பலர் முன்னிலையில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகிலிருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதால் விமான பணிப்பெண்களிடம் பிற பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முத்தமிட்டு தம்பதிகள் இருவரும் விமானத்தை விட்டு வெளியேறுமாறு விமான பணிப்பெண்கள் கூறியும் அந்த தம்பதிகள் கேட்கவில்லை.
எனவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த விமான பணிப்பெண்கள் அவர்களுக்கு ஒரு போர்வை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த வழக்கறிஞர் பிலால் பாருக் ஆல்வி என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளா.ர் மேலும் தம்பதிகளின் இந்த அநாகரிகமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத விமான பணிப்பெண்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.