திருமண வரவேற்புரையில் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுக்கும் தம்பதி கைது..!
கடந்த வாரம் நாகாலாந்தின் திமாபூரில் நடந்த திருமண வரவேற்பறையில் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்த இளம் தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தேசிய சோசலிச கவுன்சில் ஆஃப் நாகாலாந்து ஒருங்கிணைப்பின் தலைவரான கிலோ கிலோன்சரின் மகன் மற்றும் மருமகள் ச AK56 மற்றும் M16 துப்பாக்கிகளை வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
நாகாலாந்தில் உள்ள திமாபூர் மாவட்ட காவல்துறையினர் இருவரின் மீது 1959 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.பின்னர் திருமண வரவேற்பறையில் தங்கள் வைத்து இருந்த துப்பாக்கிகள் தந்தையின் மெய்க்காப்பாளர்களுடையது எனவும் புகைப்படங்கள் எடுக்க வாங்கியதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து ஆயுதங்களை அவர்கள் ஒப்படைத்ததாக நாகாலாந்து போலீஸ் டிஜிபி டி ஜான் லாங்க்குமர் தெரிவித்தார். “நாங்கள் வழக்கு பதிவு செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தோம்”. துப்பாக்கிகளை கொடுத்த இரண்டு மெய்க்காப்பாளர்களையும் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர். பின்னர் இந்த ஜோடி ஜாமீனில் விடுத்தோம் என டிஜிபி டி ஜான் லாங்க்குமர் கூறினார்.