கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம்.
பிரேசிலில் உள்ள மிக பிரபலமான உள்ளூர் நிறுவனங்களில் ஒன்று கேரிஃபோர் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில், இறந்த நபரின் சடலத்தை கடைக்கு நடுவே குடையால் மறைத்து வைத்து, அவரது உடலை அகற்றாமல், கடையையும் மூடாமல் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கேரிஃபோர் தந்த அறிக்கையின்படி அந்த நபர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடைக்குள் இருக்கும் போதே உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.
உடலை அகற்றக் கூடாது என்ற நிர்வாக வழிமுறைகளை கடைப்பிடித்து உள்ளனர். ஆனால் கடையில் வைத்ததற்கு மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளனர். மேலும் அந்த நபரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதாகவும், எந்த வகையிலும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…