ஸ்பெயின் நாட்டு பிரதமர் மனைவிக்கு கொரோனா!!அதிர்ச்சியில் ஸ்பெயின்

Default Image

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.102 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டவர்களில் 5,835 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Image result for ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மனைவிக்கு கொரோனா

இந்தநிலையில் கனடா பிரதமரை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்_ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Image result for ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மனைவிக்கு கொரோனா

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில்  கோம்ஸ் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்பெயின் சமத்துவத்துறை அமைச்சருக்கு வைரஸ் பாதிப்பு   ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்