அவசரநிலையில் அமெரிக்கா..50 மில்லியன் டாலர் ஒதுக்கி… அறிவித்தார் அதிபர்..

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருமளவு மக்களை பாதித்து வருகிறது. இதுவரை உலகமுழுவதும் 4000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, இதுவரை அமெரிக்காவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாகவும். இதற்க்கு 50 பில்லியன் டாலரை கூட்டாட்சி நிதியிலிருந்து விடுவிப்பதாகவும் கூறினார். அப்பொழுது அவர் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிகச்சலால் 12,000 அதிகமானோர் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் இதுபோன்ற சோதனைகளை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஒபாமாவை விமர்சித்தார் .

மேலும் தற்போது உள்ள மருத்துவமனைகள் அவசரகாலங்களில் செயல்படுவதை போன்று செயல்படும் என்றும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை நடத்தவும், அனைத்து இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கவும், சோதனை மையங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வலைதளத்தை உருவாக்குமாறு கூகுள் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா காரணமாக அமெரிக்காவில் 13 விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்