கொரோனா தொற்றின் உலக நிலவரம்… இதுவரை 18 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என தகவல்….
உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமக பலர் உயிரிழந்திருப்பினும் இதுவரை 18 லட்சம் பேர் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 47 லட்சத்தை கடந்துள்ளது. இந்த தொற்று நோய் பாதிப்பால் 3 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பாக
- அமெரிக்காவில் ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்அங்கு மொத்த பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர், எனவே இறப்பு எண்ணிக்கை 89 ஆயிரத்து 596 ஆக உள்ளது.
- இதேபோல் ஸ்பெயின், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டள்ளனர்.
- பிரிட்டனில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியது.
- பிரேசிலில் புதிதாக 14 ஆயிரத்து 900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
- எனினும் இந்த வைரஸ் தொற்றின் கொடூர பிடியில் இருந்து உலகம் முழுவதும் தற்போது வரை 18 லட்சம் பேர் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.