கொரோனா சேவைகளுக்கு மத்தியில் மிஸ் இங்கிலாந்து போட்டிக்கு தயாராகும் இரு செவிலியர்கள்….
ஐரோப்ப நாடன பிரிட்டனில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் இதன் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதார சேவை செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் , துப்பரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணிச்சுமைக்கு மத்தியிலும் தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களான ரெபேக்கா சின்னாரா (வயது 22) மற்றும் சோலி வெப் (வயது 24) ஆகிய செவிலியர்கள், தங்கள் மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளனர்.
இதில், அவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. நீண்ட நேரம் மற்றும் கடினமான மருத்துவப் பணி இருந்தபோதிலும், இரண்டு செவிலியர்களும், மிஸ் இங்கிலாந்து போட்டியின் அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி மகுடம் சூட்டும் நாளை எதிர்நோக்கி உள்ளனர்.