கொரோனா ஊரடங்கை தளர்த்திய சிங்கப்பூர் அரசு…. நாளை முதல் சலூன், உணவகங்கள் திறக்க அனுமதி…

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாரவி அனைத்து துறைகளையும் ஆட்டம் காணசெய்துவிட்டது. இந்த கொடிய பெருந்தொற்றிலிருந்து தப்ப அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். இந்நிலையில் தற்போது படிபடியாக அனைத்து நாடுகளிலுன் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு புதிய சலுகைகள் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி நாளை முதல் சலூன் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரதுறை அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நேற்று ஒரு நாளில் மட்டுக் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் இதுவரை 23,336 பேர் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை பார்ப்பவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.