கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் சீன அரசு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என சீன அதிபர் பெருமிதம்…

Published by
Kaliraj
உயிர்கொல்லி கொடிய கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தற்போது மீண்டுள்ள  சீனவில்  நடைபெறும் நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின்  கோரத்தாண்டவத்தால், ஒத்திவைக்கப்பட்ட  வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர், வருகிற 22-ந் தேதி தொடங்குவதாக தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சீன  அதிபர் ஜின்பிங் கூறியதாவது,  கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில், சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனையை  படைத்துள்ளது என்றும்,  சீனாவின் இந்த கடின முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் எனினும் வூகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான தற்போது மேலும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ரஷியாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில், ரஷியாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும்,  சீனாவில், வேளாண் உற்பத்தியை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும்,  கஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும்வகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது என்று  சீன அதிபர்  ஜின்பிங் அந்த சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பேசினார்.

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

32 minutes ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

1 hour ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

1 hour ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

3 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago