கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கடும் சவாலான சூழலை சந்த்தித்து வருகிறது. எனவே மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவை தற்போது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், உலகில் கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மேலும்,எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் பெண்களுக்கு எதிரான வன்முறையும் தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் தேவையின்றி பெண்கள் கர்ப்பம் ஆகும் சூழல் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நாடாலியா கனெம் கூறியுள்ளார்,இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பது தடைப்பட்டு இருக்கிறது. இதனால் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.7 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு இப்படியே ஆறு மாதங்கள் வரை நீடித்தால், உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் சூழ்நிலை ஏற்படலாம். உலகில் பல பெண்கள் குடும்பகட்டுப்பாடு செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். அத்துடன் அவர்களுக்கு ஏறபடும் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலையும் நேரிடலாம்.மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு இல்லாத வகையில் அதிவேகமாக அதிகரிக்கக்கூடும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…