உலகம் முழுவதையும் தனது கட்டுக்குள் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை 15,13,230 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதுவரை உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது வரை 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்:
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இத்தாலியில் கொரோனாவின் தாக்கம்:
இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.
ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கம்:
ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 112,950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10869 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 64,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3993 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3333 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கொரோனாவின் தாக்கம்:
சீனாவில் இன்றும் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1190 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம்:
யுனைட்டட் கிங்டமில் 60,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7094 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 38,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 812 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 23,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 895 பேர் பலியாகி உள்ளனர் .
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…