கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி….

Default Image

போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவர், அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள்கள பிரதமர்  ஜான்ஸன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், பிரதமர்  ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து அவர்,  வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  நேற்று அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகவும் சோர்வாகவும், பரிதாபமான நிலையிலும் தனது வீட்டுஅறையிலிருந்து வெளியேறி  நேற்று திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்ததால் உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் அதிக காய்ச்சல் உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் தனது பொறுப்புகள் அனைத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனித்துக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்