கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு… மீறி வெளியே வந்தால் சுட்டு கொல்ல இராணுவத்திற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவு…

உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய தொற்று தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.இந்த கொடிய தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாரபட்சமின்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். தற்போது வரை பிலிப்பைன்ஸில் 2,633 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025