கொரோனாவின் பிடியில் இருந்து மீளும் உலகம்… குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்டது…
உலகையே அச்சுறுத்தி வந்த, சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய நோய்தொற்று தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி உலக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் உலக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 2 கோடி 17 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரம்:
- அமெரிக்கா – 41,08,179 பேரும்
- இந்தியா – 39,42,42361 பேரும்
- பிரேசில் – 37,20,312 பேரும்
- ரஷியா – 8,90,114 பேரும்
- கொலம்பியா – 6,10,078 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.