சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவை மிரட்டியது. தற்போது கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது.
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காததால் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டோர்தான் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் 9 வயது வரை குழந்தைகள் யாரும் இதுவரை கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
10-19 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
20-29 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
30-39-வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
40-49- வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.4 % பேர் உயிரிழந்துள்ளனர்.
50-59- வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 1.3 % பேர் உயிரிழந்துள்ளனர்.
60-69 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 3.6 % பேர் உயிரிழந்துள்ளனர்.
70-79-வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 8.0 % பேர் உயிரிழந்துள்ளனர்.
80 வயதிற்கு மேற்பட்டோர்தான் கொரோனாவால் அதிகம் உயிரிழந்துள்ளனர். 80 வயதை தாண்டிய 14.8%உலகளவில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…