கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரபல நடிகர்..!
250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பைகளையும், அத்தியாவசிய தேவைக்களுக்கான பொருட்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளார் நந்தா.
நந்தா, மௌனம் பேசியதே என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் நந்தா மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் கோயம்புத்தூரால் உள்ள சேந்திரபாலயம் என்ற கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பைகளையும், அத்தியாவசிய தேவைக்களுக்கான பொருட்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Actor #Nandaa and his family members donated rice bags & essentials needs for a month to 250 Families at his village Sendrampalayam, Coimbatore.
@nandaaactor @Iam_NGKrishna pic.twitter.com/lS813qyBMi
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 4, 2020