அமெரிக்கா உயிரியல் பூங்காவில் புலியை தொடர்ந்து பூனைக்கு கொரோனா .!
பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு உள்ள பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த பூங்காவில் நடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று காணப்பட்டது.
இதையடுத்து அந்த புலியை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பரிசோதனை முடிவுகள் ஏப்ரல் 5-ம் தேதி வந்த நிலையில், புலிக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த மேலும் நான்கு புலிகள் மற்றும் மூன்று ஆப்ரிக்க சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பூங்காவில் பணிபுரிந்து வந்த ஊழியரிடம் இருந்து பரவி இருக்கலாம் எனவும் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.