உலக நாடுகளை எல்லாம் மிரட்டி வரும் கொரோனா 10 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 200பேரை கூட தாண்டாத அதன் பாதிப்பு என மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகவும்;ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய வியட்நாம் நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவில் முதன் முதலாக இவ்வைரஸின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி கண்டறியப்பட்டு கட்டுப்படுத்துவதற்குள் 205க்கும் மேற்பட்ட நாடுகளில் அசுர வேகத்தில் வைரஸ் பரவி கடும் பாதிப்பை உலக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக வைரஸால் குறிவைக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இது வரை சந்திக்காத கோரத்தை சந்தித்து வருகின்றன.அங்கு தினமும் 1000க்கான மக்களின் பிணக்குவியல்களை எல்லாம் சிமெண்ட் வைத்து அந்தந்த நாடுகள் புதைத்து வருகின்றனர்.
மேலும் உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000 கடந்து அசுர வேகத்தில் சென்று கொண்ருக்கிறது. 1,014,499 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு நிலையில் 2,12,018 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் 10 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு தான் வியட்நாம் அங்கும் இவ்வைரஸ் பரவியது ஆனால் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் இங்கு இறக்கவில்லை. வைரஸ் பரவ தொடங்கியதும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் வளையத்திற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு முறையாக பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கொரோனா அறிகுறி இருந்தவர்களை உடனே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களை தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அளித்தனர்.14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் பழைய ராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வியட்நாம் செய்த காரியத்தில் பாராட்ட தக்க ஒன்று பாதிக்கப்பட்ட ஐரோப்பியா நாடுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து வந்த 45,000திற்கும் மேற்பட்ட மக்களை தனிமைப்படுத்தியது வியட்நாம் மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு முழுவதும் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டது.
இவ்வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை எல்லாம் சேகரிப்பதில் அதி வேகமாக செயல்பட்டு அவர்கள் எப்படி வைரஸால் பாதிக்கப்பட்டனர் ,அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என மொத்த விவரங்களையும் தெரிந்து கொண்டு அவர்களையும் மின்னல் வேகத்தில் தனிமைப்படுத்தினர்.
வைரஸ் பாதிப்பில் ஆசிய நாடுகளை ஒப்பிடும் போது வியட்நாம் வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட வசதிகள் மட்டுமே கொண்ட ஒரு நாடு.ஆனால் தனது சீறிய முயற்சியால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200யை தாண்டவில்லை என்பதில் இருந்து அறியலாம் அந்நாட்டின் அசாத்திய நடவடிக்கையை தற்போது வரை கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது மற்ற நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளது வியட்நாம்.
இந்த விவகாரத்தில் தென்கொரியாவை போல நாட்டு மக்களை எல்லாம் உடனடியாக பரிசோதித்து முடிவுகளை உடனுக்கு உடன் முடிவுகளை அறிந்து அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுத்தது. மேலும் ஒற்றை கட்சி ஆட்சி வியட்நாமில் நடப்பதால் தீவிர கண்காணிப்பு மட்டுமல்லாமல் உட்கட்டமைப்பு உள்ளது. இதன் காரணமாக கடுமையான மற்றும் துரித நடவடிக்கைகளை எளிதாக செயல்படுத்த முடிந்தது.
வியட்நாம் தற்போது மக்களை பாதுகாக்க விரைந்து செயல்பட பாடம் கற்று கொடுத்தது சார்ஸ் வைரஸ் தான்.இதே போல் கடந்த 2003ல் சீனாவில் சார்ஸ் வைரஸ் முதலில் பரவிய நாடு வியட்நாம்.இந்த பாதிப்புக்கு அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுத்தது.சார்ஸ் இருந்து பாடம் கற்றுக்கொண்ட வியட்நாம் தற்போது வேகமாக செயல்பட்டு உலகையே உலுக்கி மின்னல் வேகத்தில் பரவி உயிர்களை குடித்து வரும் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திஉ ள்ளது என்றால் அதன் செயல்பாடு எத்தகைய மின்னல் வேகத்தில் இருந்திருக்கும்.தற்போது மற்ற நாடுகள் எல்லாம் வியட்நாமை ஆச்சரித்துடன் பார்க்கின்றனர்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…