முன்னெச்சரிக்கையை ஸ்மார்ட் போனில் கொண்டு வந்த சீனா!
ஸ்மார்ட் போன்களின் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் பார்கோடு கொண்டு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவில் சுகாதாரத்துறையினர் ரயில் நிலையம், ஓட்டல்கள் வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகர எல்லைகள் போன்ற இடங்களில், , ‘மொபைல் போன் பார்கோடு’ வைத்து உள்ளனர்.
இந்த பார்கோடு ஆனது பொதுமக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது போனில் பச்சை குறியீடு வந்தால் மட்டுமே அங்கே பணியில் இருக்கும் அதிகாரி அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்.
மாறாக சிவப்பு குறியீடு வந்தால், சம்பந்தப்பட்டவர், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர், அறிகுறியுடன் இருந்தவர் அல்லது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்று அர்த்தம்.
இவர்கள் ஒட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. ஒரு வேளை பச்சை,சிவப்பு பதிலாக மஞ்சள் குறியீடு வந்தால், அவர் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் அல்லது 14 நாட்கள் தனிமைபடுத்தல் காலம் முடிவடையாதவர் என்று அர்த்தம்.
இவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.இதனால் எளிதாக கொரோனா தொற்று உள்ளவர்களை அடையாளம் காணவும் மக்களை தொற்றுக்கு பரவாமல் தடுக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.