கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னக்கு தள்ளிவிட்டு முன்னேறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே கடும் அச்சத்தில் இருந்து வரும் சூழல் அங்கு பதற்றத்தை தணிக்கவும் பரவலை கட்டுப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகளை அரசு தற்போது எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே நியூயார்க்கில் முழு ஊரடங்கு உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
உலகம் முகழுவதும் பரவி தொற்றால் கடும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வரும் கொலைக்கார கொரோனாவிற்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 7 லட்சத்தை தாண்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பலி எண்ணிகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பிற்கு கடுமையாக ஆளாகியதாக இத்தாலி கூறப்பட்டது.அங்கு மக்கள் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக மடிந்தனர்.
அங்கு பிணக்குவியல்களை கண்ணால் பார்க்க முடிந்தது.கல்லறைகளே அதிகம் என்று இருக்க தன் வாழ்நாளில் இப்படி ஒரு அழிவை அந்நாடு சந்தித்து இருக்காது என்று எல்லாம் இத்தாலி குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் வெளியானது.இதனால் கொரோனா பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டது இத்தாலி தான் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது இத்தாலி ஒரு அடி பின்னுக்கு தள்ளி அசுர வேகத்தில் அமெரிக்கா முன்னேறி கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கையானது 2,438; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.நிலைமை கைவிட்டு சென்றதை கைக்கட்டிக் கொண்டு நின்ற அதிபர் உட்பட அனைவரும் அபாயத்தை சுதாரித்து கொண்டு நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த தற்போது அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் இந்த முடிவிற்கு கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.வைரஸ் குறித்து முன்னரே அதிபரை மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதாகவும் ஊரடங்கு தேவை என்று எடுத்துரைத்தாகவும் ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காமல் இருந்து விட்டு தற்போது வைரஸ் அமெரிக்காவிற்கு சாவுமணி அடிக்க தொடங்கி பின்னர் ஊரடங்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு காலம் தவறிய நடவடிக்கை என்றும் சிலர் இப்போதாவது தங்களுக்கு ஞானோதயம் வந்ததே என்று ட்ரம்ப் மீது அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…