கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு- உலக சுகாதார அமைப்பு கவலை
உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) பேசுகையில், ”கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4-வது மாதத்திற்கு மேல் பயணித்துக்கொண்டிருக்கிறது.இந்நிலையில், கொரோனா அதி தீவிரமாக உலகம் முழுவதும் பரவும் நிலையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதை நாம் உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.