முதல் முறையாக ரஷியாவில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி.!
முதல் முறையாக ரஷியாவில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது , இந்த நிலையில் ரஷ்ய நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் 18 பேருக்கு தடுப்பூசி முதன்முறையாக செலுத்தப்பட்டது, இந்த ஊசி செலுத்தியதால் அவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர்களது உடல்நிலை குறித்து புகார் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். ரஷியாவில் கொரோனா வைரஸால் 7,600 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5.60 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.