பரிசோதனையில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ! தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு
தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசியை தயாரித்தது.இதனிடையே பரிசோதனையின் போது தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் 60,000 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக்கான ஆன்லைன் சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.