கொரோனாவால் 100 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் – ஐ.நா. தகவல்!

Default Image

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. தகவல்.

உலகளவில் தற்பொழுது கொரோனா பிரவலின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. வல்லரசு நாடுகளே ஊரடங்கு உத்தரவால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த கொரோனாவால் ஏழை நாடுகளும் அதிகளவில் பொருளாதார இழப்பீடை சந்தித்துள்ளது. தற்பொழுது கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. மருந்து வருவதற்கு முன்பே பல நாடுகள் முன்பதிவு செய்து வைத்திருக்கின்றது. இதனால் ஏழை நாடுகளுக்கு மருந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளவில் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐ.நா.வின் புதிய ஆய்வின்படி, உலகின் மிக ஏழைகளின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றுநோயின் கடுமையான விளைவுகளால் 207 மில்லியன் மக்களை கடும் வறுமையில் தள்ளக்கூடும். மேலும், 2030 ஆம் ஆண்டில் மொத்தம் 1 பில்லியனுக்கும் அதிகமாக மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. நடத்திய அந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்