கொரோனா வைரஸ்: தன்வந்திரி-மிருத்யுஞ்ச மகாயாகம்..வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம்
சீா்காழி மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டி சிறப்பு தன்வந்திரி யாகம், மிருத்யுஞ்ச மகா யாகம் நடைபெற்றது.
இந்த மகா யாகத்தை 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பூா்ணாஹுதி செய்து தீபாராதனை காட்டினா். இதன் பின்புனித நீா் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலவரான வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாார சுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தா் சுவாமிகளுக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.