அமெரிக்காவில் கொடூர தாக்குதலை நடத்தும் கொரோனா வைரஸ்! 85 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது.
கொரோனா வைரஸ் தனது தாக்குதலை முதலில் சீனாவில் தான் நடத்தியது. இந்த வைரஸ் தாக்கத்தால், அங்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது.
இந்த வைரஸால் உலக அளவில், இதுவரை 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இந்த கொரோனா வைரஸால், அதிகமான பாதிப்பையும், அதிகமான உயிரிழப்பையும் சந்தித்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,430,348 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 85,197 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,772 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.