கொரோனா வைரஸ் பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது – உலக சுகாதார நிறுவனம்
முதலில் சீனாவில் தொடங்கி பின் மற்ற நாடுகளையும் தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், உலக அளவில் இதுவரை, 1,938,863 பேர் இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸின் தன்மை குறித்து, எந்த வெளிப்படையான கருத்தையும் கூறாமல், அமைதி காத்து வந்த உலக சுகாதார நிறுவனம், தற்போது இந்த வைரஸின் வீரியம் குறித்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரா அத்தானம் கூறியுள்ளதாவது, ‘கொரோனா வைரஸ், பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என்றும், இதனை போதுமான அளவு தடுப்பு மருந்து இருந்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும், மெதுமெதுவாக தான் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல், ஊரடங்கை தளர்த்தினாள், மேலும் அதிகமாக இது பரவ கூடும் என உலக நாடுகளுக்கு இவர் அறிவுரை வழங்கியுள்ளார்.