சீனாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.!
சீனாவில் நேற்று மட்டுமே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கிய சீனாவில் இதுவரை 82,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
இருந்தும் நேற்று ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் ஒருவருக்கும், 11 வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரானா உறுதியானது தெரியவந்துள்ளது. நேற்று மட்டுமே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று கொரோனா வைரஸால் யாரும் உயிரிழக்கவில்லை. நேற்று 89 பேர் கொரோனாவு சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.