சீன தடுப்பூசிகளை பயன்படுத்திய நாடுகளுக்கு ஆபத்து…!
சீன தடுப்பூசிகளை பயன்படுத்திய மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தடுப்பூசி போடும் பணிகளை கொரோனா பாதித்த அனைத்து நாடுகளும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.
இதற்கிடையில்,மங்கோலியா தனது மக்களுக்கு “நம் நாட்டை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம்” என்று உறுதியளித்தது.இதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டு அதிபர் “கொரோனா இல்லாத பழைய வாழ்க்கைக்கு திரும்புவோம்” என்று கூறினார்.மேலும்,சிறிய தீவு தேசமான சீஷெல்ஸ்,பொருளாதாரத்தைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டது.
காரணம்,மூன்று நாடுகளும் தங்கள் நம்பிக்கையை,குறைந்த பட்சம், எளிதில் அணுகக்கூடிய சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் வைத்தனர்.அதன்படி,சீஷெல்ஸ்,பஹ்ரைன் மற்றும் மங்கோலியாவில், 50% முதல் 68% மக்களுக்கு முழுமையாக சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவாக் பயோடெக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது என்று தரவு கண்காணிப்பு திட்டமான எவர் வேர்ல்ட் இன் டேட்டா தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,கொரோனா வைரஸிலிருந்து விடுபடுவதற்கு பதிலாக, தற்போது மூன்று நாடுகளும் கொரோனா தொற்று நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக,மங்கோலியாவில் நேற்று ஒரே நாளில் 2,400 பேர் புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்காகும்.
இதுகுறித்து,அமெரிக்க பத்திரிகை ஒன்று கூறியதாவது:”தொற்று பரவலை தீவிரமாக கட்டுப்படுத்தும் திறன் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளுக்கு இல்லை.மாறாக,சீன தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்திய நாடுகளில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது”,என்று தெரிவித்துள்ளது.