6 மாதங்களுக்கு பின்பு ஒருவருக்கு கொரோனா தொற்று – நியூசிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம்!
ஆறு மாதங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரகாலம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாள் பொதுமுடக்கமும் விதிக்கப்பட்டுள்ளது.