சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமாக உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
உலகமுழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்நிலையில் பிரான்சில் கொரோனா வைரசால் 19 பேர் பலியாகி உள்ளனர். 1,100-க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்னர்.
இதையெடுத்து பாரீசில் உள்ள 2 சர்வதேச விமான நிலையங்களை இயக்கி வரும் குரூப்பே ஏ.டி.பி. நிறுவனத்தின் தலைவர் அகஸ்டின் தெ ரோமனெட்டுக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மிக மோசமாக இல்லை என்பதால் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்து வருவதாகவும், தனது வீட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…