சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் புதிய நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.
பின்னர் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் சீனா தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாசப்பிரச்சினை, இருமல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். வூஹான் நகரில் மட்டும் 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் 9 பேர் தீவிர சிகிக்சை பிரிவில் பெற்று வருகின்றனர்.
மேலும் வூஹான் நகரில் உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சார்ந்த 3 பேருக்கு இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கியதால் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் “கொரனா வைரஸ்” பரவி உள்ளது.
கொரனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சீனா முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் ஒரு விலங்கு மூலம் மனிதனுக்கு பரவியதாகவும் பின்னர் மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டுகிறது.
வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 6 பேர் பலியாகி இருந்தனர். அதில் 4 பேர் 89 வயதை எட்டியவர்கள். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது எனவும் , 440 பேரை இந்த வைரஸ் தாக்கி இருப்பதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பரவாமல் இருக்க தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்டுகிறார்கள்.
கடந்த 2002-ம் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி 650 பேர் வரை பலியாகினர். அதேபோல கனடாவில் 44 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் ,தைவானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும் சார்ஸ் நோய் தாக்குதலில் இறந்தனர். சார்ஸ் பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…