கொரோனோ வைரஸ் இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு.! 400 பேர் அனுமதி.!

Default Image
  • சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் புதிய நோய் “கொரனா வைரஸ்”.
  • இந்த வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது எனவும் , 440 பேரை  வைரஸ் தாக்கி இருப்பதாக  சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் புதிய நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.

பின்னர் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் சீனா தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு  கடுமையான சுவாசப்பிரச்சினை, இருமல்  ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். வூஹான் நகரில் மட்டும் 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் 9 பேர் தீவிர சிகிக்சை பிரிவில் பெற்று வருகின்றனர்.

Image result for coronavirus virus

மேலும் வூஹான் நகரில் உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சார்ந்த 3 பேருக்கு இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கியதால்  தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் “கொரனா வைரஸ்” பரவி உள்ளது.

கொரனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சீனா முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் ஒரு விலங்கு மூலம் மனிதனுக்கு பரவியதாகவும் பின்னர் மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டுகிறது.

வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 6 பேர் பலியாகி இருந்தனர். அதில் 4 பேர் 89 வயதை எட்டியவர்கள். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது எனவும் , 440 பேரை இந்த வைரஸ் தாக்கி இருப்பதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Image result for coronavirus virus

இந்தியாவில் பரவாமல் இருக்க தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்டுகிறார்கள்.

கடந்த 2002-ம் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி 650 பேர் வரை பலியாகினர். அதேபோல கனடாவில் 44 பேரும்,  வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் ,தைவானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும் சார்ஸ் நோய் தாக்குதலில் இறந்தனர். சார்ஸ் பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்