கொரோனா:
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இன்றைய பலி எண்ணிக்கை:
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.
நேற்றைய பாதிப்பு:
நேற்று மட்டும் சீனாவில் 2100- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மத்திய சீன மாகாணத்தில் மொத்த 16000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார்.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் இறந்த முதல் மரணம் இதுவாகும்.
சீனாவில் இருந்து வெளியேற்றம் :
இந்தியா உட்பட பல நாடுகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள ஹூபே மற்றும் வுஹானில் மாகாணங்களில் இருந்து வெளியேற்றியுள்ளன.
நேற்று காலை 9.45 மணிக்கு இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…