கொரோனா தடுப்பு மருந்து.! 3 தடுப்பூசிகளுக்கு சீனா ஒப்புதல்.!
சீனா ராணுவம் தயாரித்தது உட்பட 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுக்கு மேற்கொள்ள சீன அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கிய சீனாவில் இதுவரை 82,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் ஈடுபட்டு, முதற்கட்டமாக தடுப்பூசி கண்டுபிடித்து அதனை 96 பேருக்கு செலுத்தி அவர்களை ஒரு ஆராய்ச்சிக்குழு கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சீனா ராணுவம் தயாரித்தது உட்பட 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுக்கு மேற்கொள்ள சீன அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், வுகான் நுண்ணுயிர் உற்பத்தி நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் இதர நோய்கிருமிகள், வளரும் திறனை இழக்க செய்வதே இம்மருந்தின் முக்கிய நோக்கமாகும்.