இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் எனவும் மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மார்ச் 31-ம் தேதி மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது :
யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
தவறான செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்வதால் நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமில்லாமல் நாமும் அதனால் பாதிப்படைய நேரிடும் .எனவே ஆதாரமற்ற தகவல்களை பகிரவேண்டாம் என்று மருத்துவர்கள் சமுக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர் .
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…