பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசால் பாகிஸ்தானில் இதுவரை 21,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 480-ஐ தாண்டியது. இந்நிலையில், பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில், பத்திக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களில் 250 மருத்துவர்கள் மற்றும் 110 செவிலியர்கள் உட்பட 503 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வைரஸ் பரவி உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
கொரோனா வைரஸால் மருத்துவ ஊழியர்கள் 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மருத்துவர்கள். மருத்துவர் ஹக்கிற்கு வென்டிலேட்டர் கிடைக்காததால் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் பல வாரங்களாக புகார் அளித்து வருகின்றனர். இதனால் தான் அவர்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதேபோல், 40 பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானில் கொரோனா வைரஸை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…