கொரோனா வைரஸ்.! மருந்தை கண்டுபிடிக்க ரூ.100 கோடியை வழங்கிய அலிபாபா நிறுவனர்.!

Default Image
  • சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 170 பேர் உயிரிழந்தும், 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதியை, அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தற்போது புதியதாக கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர். இது தற்போது இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவிக்கு இந்த வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில், வேகமாக பரவி வரும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டது, மற்றும் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என்பதால் இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ, சிகிச்சையோ ஏதுமில்லை. இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும், மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பல்வேறு துறைகளும், நாட்டில் உள்ள பணக்காரர்களும் அதற்கான நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதியை, அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமார் ரூ.41 கோடி தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்