கொரோனாவால் பாதிக்கப்பட்ட அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் ஐசியூ பிரிவில் அனுமதி! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்…!
கொரோனா தொற்று காரணமாக அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.அந்தவகையில், இன்று அதிகாலை பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,சற்று முன் பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து,அம்மா கிரியேஷன்ஸ் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”எனது 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
எனது 36வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ???????? pic.twitter.com/uNm9G5X1Vr
— T Siva (@TSivaAmma) May 17, 2021
இதனைத் தொடர்ந்து,அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினர் பலரும் தங்கள் பிரார்த்தனைகளையும்,விரைவில் நலம்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.எனினும்,கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.