கொரோனா ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்குகிறது.!

கொரோனா வைரஸ் ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் 8,583,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,532,547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 456,428 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகளவில் ஆராச்சியாளர்கள் கொரோனா தொற்று யாருக்கு வரும், யாரை அதிகம் பாதிக்கும், யார் தொற்றில் இருந்து மீண்டு வர முடியும் என ஆராய்ந்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கொ ரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டு இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளையும், நோயால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக வாழ்கிறவர்கள் மற்றும் கொரோனா லேசான அல்லது அறிகுறிகள் அற்றவர்கள் என ஆயிரகணக்கானோரை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்குவதாகவும், அதே நேரத்தில் ‘ஓ’ வகை ரத்த பிரிவை கொண்டவர்களுக்கு மிக குறைவாக கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.