சித்த மருத்துவத்தால் மீண்ட சீனா..!கொரோனாவை விரட்ட கைகொடுத்தது பாரம்பரிய மருத்துவமே-நெகிழும் சீனர்கள்

கொரோனா வைரஸ் என்கிற கொலைக்கார கோவிட்-19 என்று பெயரிட்ட வைரஸ் முதல்முதலில் தனது கொடூரத்தை அரங்கேற்ற துவங்கியது சீனாவில் இந்த தொற்றை அந்நாட்டு மருத்துவர் முதன் முதலாக கண்டுபிடித்தார்.ஆனால் மருத்துவர் ஏதோ பிதற்றுகிறார் என்று அவருடைய பேச்சை செவிசாயிக்க தவறியது.
இதன் விளைவு அடுத்த சில நாட்களில் மக்கள் ஏதோ இனம் புரியாத நோய்க்கு பாதிக்கப்பட்டு செத்து மடிவதை கண்டு அஞ்சி நடுங்கியது சீனா.,உடனே மருத்துவர்கள் ஒன்றுக்கூடி இது குறித்து ஆராய்கின்றனர்.இது ஒரு நுண்ணுயிரி என்றும் இதன் தொற்று அதிவேகமாக பரவும் வல்லமை கொண்டது என்று அறிகின்றனர்.
தலைக்கு மேல் வெள்ளம் போனக் கதையாக மருத்துவர் கூறும் போது அலட்சி படுத்திய சீனா நிலைமை கையை விட்டு செல்வதை கண்கூடாக பார்த்தது.எங்கு பார்த்தாலும் மக்கள் இந்நோய் பாதிப்புக்கு ஆளாவதை கண்டு சீனர்கள் அஞ்சி நடுங்கிய தருணம் அது இவ்வாறு பரவிய வைரஸ் தொற்று முதன் முதலில் சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் இரால் விற்கும் ஒரு பெண்ணிற்கு இத்தொற்று பாதிப்பு இருந்தாக சீனா தற்போது தெரிவித்துள்ளது.
நிலைமை இன்னும் மோசமாகி விடக்கூடாது என்று கணித்து கொண்ட அந்நாட்டு அதிபர் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தினார்.தொற்று அதிகம் பரவிய வூகான் நகரம் மூடப்பட்டது.உள்ளே இருந்து யாரும் வெளியே வராமலும் ,வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லா வண்ணம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.மேலும் ராணுவமும் களமிரங்கியது.சீன அரசு இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் நோய் தொற்று கொண்டோரின் எண்ணிக்கையானது மார்ச் 10க்கு பின் தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
உலகே சீனாவை பார்த்து அஞ்சிய தருணம்,சீனாவின் ஆற்றலை பார்த்து அல்ல;அங்கு ஏற்பட்டு கொண்டிருந்த ஆபத்தை கண்டு,தங்கள் நாட்டிற்குள் சீனர்கள் நுழைய தடை என பல கட்டுப்பாட்டுகளை எல்லாம் பிற நாடுகள் பிறப்பித்தது.
இந்த கொலைக்கார கொரோனாவை வைரஸ் பற்றி ஏதும் அறியவில்லை.சாதாரணமாக நினைத்த மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வைரஸ் விரைவாக நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸை முதலில் கண்டறிந்த மருத்துவரையும் காவு வாங்கியது கொரோனா பின்னர் இதன் வீரியத்தை அறிந்த சீன அரசு நிபுணர் குழுக்களை வூகான் நகரை களஆய்வு செய்ய உடனடியாக அனுப்பியது.
சும்மா சொல்லக்கூடாது அத்தகைய குறுகிய காலத்திலும் மிக வேகமாக செயல்பட்ட குழு வைரஸின் ரகத்தை உறுதி செய்து அதன் அறிகுறிகளை கண்டறிந்து மக்களை உடனடியாக தனிமைப்படுத்துதல் அவசியம் என அரசுக்கு நிலைமை விவரிக்கவே ஜன. 23ல் வூகான் நகரத்தையே முழுமையாக மூட சீன அரசு உத்தரவிட்டது. மூடப்பட்ட வூகான் நகருக்கு மருத்துவ குழுக்கள் மருத்துவ உபகரணங்கள் போன்ற அனைத்தும் அனுப்பபட்டன.
இருந்த போதிலும் இதன் தொற்று மின்னல் வேகத்தில் பரவி அசுர வளர்ச்சி அடையவே ஆடி போய் நின்றது சீனா.கொத்துக்கொத்தாக பொதுமக்கள் மடிந்து வருகின்றனர்.என்ன செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டிருந்த சீனாவிற்கு தக்க ஆலோசனைகளை வழங்கியது நிபுணர் குழு பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் முதலில் தனிமைப்படுத்த வேண்டும் அதற்கு அவர்களுக்கு என்று தனியாக மருத்துவமனை வேண்டும் என்று எடுத்துரைக்க சிறிதும் தாமதிக்காமல் நோயின் தீவிரத்தை உணர்ந்து ஆயிரம் படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட ‘ஹோவ் ஷென் ஷான்’ எனும் புதிய மருத்துவமனை இரவுபகலாக வெறும் 10தே நாட்களில் கட்டி முடித்தது.
கட்டி முடிக்க மருத்துவமனையை உடனே செயல்பட்டிற்கு கொண்டு வந்து ராணுவ மருத்துவர்களும் களமிரக்கப்பட்டுனர்.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் 14 தற்காலிக மருத்துவமனைகள் கட்டி முடித்தது மட்டுமல்லாமல். உடன் 12,000 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யதது.இந்த வைரஸ் தாக்கத்தின்போதும் பிற நாட்டு மருத்துவர்களும் வூகான் நகரத்துக்கு தாங்களாகவே பணிக்கு செல்ல முன்வந்தனர் என்பது மருத்துவப்பணியில் உள்ளவர்களை வணங்கவேண்டிய தருணம்.உயிர்போகும் என்று தெரிந்தும் களத்தில் இறங்கினர் மருத்துவர்கள்.
சீன அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பிக்கிறது.அதில் மக்கள் அவர்களாக வீட்டிலேயே தங்குங்கள் வெளியே செல்லாதீர்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். போன்ற சுகாதார நடைமுறைகளை அறிவுறுத்தியது.அறிவுறுத்தியது அரசுதான் என்றால் பொதுமக்களும் அரசுடன் இணைந்து மக்கள் முழு மூச்சாக இதனை கடைபிடித்தனர். தனது தொழிட்நுட்ப வசதியினை கொண்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கியது சீனா.
கொலைக்கார கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை ஆனால் எவ்வாறு கட்டுப்படுத்தி அதனை சீன மட்டுபடுத்தியது அதன் பின்னால் உள்ளது கதையே சீனா மேற்கத்திய மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவில்லை.மாறாக சீனப் பாரம்பரிய மருத்துவத்தையும் கையில் எடுத்தது.இந்த வைரஸ் தொற்றியவர்களுக்கு சீன பாரம்பரிய மருத்துவத்தையே பயன்படுத்தியது.
இந்தியாவில் எவ்வாறு நாம் சித்த மருத்துவத்தை பயன்படுத்துவதை போல சீன மருத்துவத்திலும் மிக பழமையான பல மூலிகைகள் உள்ளது.அதில் நிலவேம்பு போன்றவை கவனம் பெற்றவை.இவை குளிர்காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது. சீனாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட சீன மருந்தில் ‘பாதாமி’ விதை (Prunus armeniaca Linne var.ansu Maximowicz) என்ற அடிக்கடி மூலப்பொருளாக பயன்படுத்தியுள்ளது.
மேலும் அஸ்ட்ராகல்ஸ்’ (As tragalus) மற்றும் ‘போரியா’ (Wolfiporia Extensa) என்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் மேலும் சீன மருத்துவத்தில் ‘மெரிடியன்’ என்ற வகை உடற் பயிற்சிகளை (Meridian Aerobics) கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் கற்பித்தனர். இதுவும் இந்நோயை விரைவாக குணப்படுத்த உதவியதாக சீனர்கள் கூறுகின்றனர்.இப்போது சீனாவில் மெல்ல மெல்ல நிலைமை திரும்பி வருகிறது.
அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது.பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.மேலும் கூற வேண்டுமென்றால் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய சீனா செல்கிறது .கையை மீறி சென்றதை கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தை எண்ணி உள்ளபடியே நெகிழ்கின்றனர் சீனர்கள்