தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கொரோனா பரிசோதனை!
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வெளியாகின. பிரதமர் நேதன்யாகுவின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.