தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா..பாதிப்பு 1,204 ஆக உயர்வு.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக இருந்த நிலையில், தற்போது 1,204 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 28,711 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றார்கள் என்றும் அரசு கண்காணிப்பில் 135 பேர் என தெரிவித்துள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 68,519 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19,255 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 1,204 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 33 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6,509 பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்