இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலி.!

Default Image

இங்கிலாந்தில் இதுவரை முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கு கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இங்கிலாந்தும் தற்போது சேர்ந்துள்ளது. இந்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி அதிக உயிர்களை கொன்று வருகிறது. இதில், முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நான்கு நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய ஒற்றுமை காணப்படுவது வேதனை அளிக்கிறது.

இந்த நாடுகளில் இதுபோன்ற முதியோர் இல்லங்களில் வசித்த சுமார் 18% முதல் 20% வரையிலான முதியவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், போதிய கவனிப்பும் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதை உறுதிப்படுத்துவதுபோல் இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயதானவர்கள் நிலையும் கொரோனா தாக்குதலுக்குப் பின், மிக மோசமாக காணப்படுகிறது. இந்நாட்டில் சுமார் 2,000 முதியோர் இல்லங்கள் உள்ளன. அவற்றில் 70க்கும் மேற்பட்ட இல்லங்களில் கடந்த ஒரு மாதத்தில் 521 முதியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் பீட்டில்பரோ என்ற நகரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் 140 முதியவர்களின் 24 பேர் கடந்த 10 நாட்களில் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 6 பேர் பலியானதும் இதில் அடங்கும். இந்த இல்லத்தில் சராசரியாக 6 பேருக்கு ஒருவர் என்று உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 1,400 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அந்நாட்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் அந்நாட்டின் அல்சைமர்ஸ் சொசைட்டி இந்த எண்ணிக்கை 2,500 ஆக இருக்க வாய்ப்புள்ளது, எனக் கூறுகிறது. அதேநேரம், அரசாங்கம் வெளியிடும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் பட்டியலில் முதியோர் இல்லங்களின் உயிர்ப்பலி சேர்க்கப்படுவதே இல்லை என்ற சமூக ஆர்வலர்களின் இடையே குற்றசாட்டு எழுந்து வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் கொரோனாவால் 1,08,692 பேர் பாதிக்கப்பட்டு, 14,576 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்