புதிதாக பெய்ஜிங்கில் 22 பேருக்கு கொரோனா.!சீனாவில் மொத்தமாக 83,418 ஆக உயர்வு.!
பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சீனாவில் புதிதாக 22பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சீனா தலைநகரான பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் புதிதாக 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 114 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. புதிதாக எந்த இறப்புகளும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு மத்திய சீன நகரமான உகானில் முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து 83,418 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதை அடுத்து, அதில் 4,634 பேர் இறந்ததாக சீனா அறிவித்தது. அதை ஒப்பிடுகையில் பெய்ஜிங்கின் நிலைமை சரியான திசையில் செல்வதாகவும், கொரோனாவை தடுக்க கடுமையாகவும், சிக்கலானதாகவும் உள்ளதாக நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் திங்களன்று தெரிவித்திருந்தார்.