சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்து தற்போது இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 7,99,741 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,721 பேர் பலியாகியுள்ளனர். 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இயல்பு நிலை திரும்பி வரும் சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒருவர் பலியாகியுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக உயர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,518 அதிகரித்துள்ளது. 2,000க்கும் அதிகமானவர்கள் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து சீனா படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…